Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொல்கத்தா…. நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை…. மோடி இன்று தொடக்கம்

கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி நதியில் 32 மீட்டர் ஆழத்தில் இதை உருவாக்கி உள்ளனர். சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழ இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரெயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார்16 மீட்டர் ஆழத்தில் இந்த மெட்ரோ ரெயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியதும் அங்கு சாலை போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ரெயில் சேவையில் தினமும் 7 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மெட்ரோ ரெயில் சேவை மூலம், கொல்கத்தா நகரத்தின் இரண்டு பரபரப்பான பகுதிகளை விரைவாக சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!