Skip to content

33ஆண்டு கால எம்.பி. பதவி நிறைவு…. மன்மோகன் சிங்குக்கு … ஸ்டாலின் வாழ்த்து

33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1991 முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மாநிலங்களவைக்கு தேர்வான மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

இந்திய ஒன்றியத்துக்கும், மக்களுக்கும் மகத்தான பங்களிப்பு செய்த பெருமிதத்துடன் உங்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எதிர்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என திமுக சார்பிலும் தமிழக மக்கள்  சார்பிலும் வாழ்த்துகிறேன்.

உங்கள் அறிவாற்றல் மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!