வங்கக்கடலில் அடுத்த 6 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் தீவிரமடைந்து 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்தப் புயல் உருவானால், அதற்கு இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ என்ற பெயர் சூட்டப்படும். மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 2 மாலையில் ஆந்திரா அருகே கரையை நெருங்கும் என்றும், இது 2026 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் உருவாகும் இரண்டாவது புயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் புதிய புயல்
