சிவகங்கை மாவட்டம், சாலைகிராமத்தை சேர்ந்தவர் வியாகுல நவீன் (வயது 22/26). திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிபிஏ (BBA) படிப்பை முடித்துள்ளார். பின்னர், திருச்சி தில்லைநகர் ஈஷா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் என்ற தனியார் நிறுவனத்தில் நிலங்களை வாங்கி விற்கும் தரகு வேலை பார்த்து வந்துள்ளார்.
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, முத்து விஜயபுரத்தை சேர்ந்த 22வயதுடைய மாணவி (அமல வர்ஷினியா 22/26), திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் BCom முடித்துவிட்டு தற்சமயம், திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில் உள்ள தமிழ் ஓவியா விடுதியில் தங்கி இருந்து கொண்டு, திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் MBA படித்து வருகிறார்.
மேலும், ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனத்தில் (ஒமேகா) பகுதிநேரமாக பணியாற்றிவருகிறார்.
வியாகுல நவீன்- அமல வர்ஷினியா ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டு காலமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளது. இந்த நிலையில், மாணவியின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கும், கல்யாணத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் எதிர்ப்பால், அந்த மாணவியும் வாலிபரைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் நவீன், திருச்சி ரேஸ் கோர்ஸ் பகுதியில் பொதுமக்கள் நடமாடும் நடைபாதைக்கு வரவழைத்து அந்த மாணவியின் முகத்தை கற்களால் தாக்கியுள்ளார். இதில் மாணவியின் முகம் சிதைந்தது. தற்போது அந்த மாணவி ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவியை கைகளால் தாக்கி மயக்கமடைய செய்து, அவர் தரையில் வீழ்ந்த உடன் அருகில் கிடந்த கற்கலால் அவளின் முகத்தை அடித்து சிதைத்துள்ளார்.
காவல்துறையின் மத்திய மண்டல தலைவரின் முகாம் அலுவலகம் முன்பாக நடந்த மனதை பதற வைக்கும் இச்சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இச்சம்பவம் குறித்து திருச்சி கே.கே. நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வாலிபர் யாகுல நவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
