மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1 கோடியோ 20 லட்சம் பேர் இணைத்துள்ளனர். 58 லட்சம் பேர் ஆன்லைனிலும், 61 லட்சம் பேர் மின்வாரியம் நடத்திய முகாம்கள் மூலமும் இணைத்து உள்ளனர். இந்த மாதம் இறுதி வரை ஆதார் இணைப்பு பணி நடைபெறும். அதற்குள் அனைவரும் விரைவாக இணைத்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 2.2 லட்சம் விவசாயிகளுக்கு தான் இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ஒன்றரை வருடத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வரும் பொங்கல் தினத்திற்குள் இந்த ஒன்றரை லட்சம் இலக்கினை பூர்த்தி செய்யும் பணி நிறைவு பெற்று விடும்‘
இவ்வாறு அவர் கூறினார்.