Skip to content
Home » திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…!

திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…!

திருச்சியில் வரலாறு காணாத வெயில் திருச்சி மாநகரில் 110 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் அடித்தது. இந்த வெயிலின் தாக்கத்தில் சிக்கி தவிக்கும் மக்கள். அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

வரலாறு காணாத வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் இயல்பை விட நான்கு டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பம் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையில் இருந்து அவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் நேற்று 113 டிகிரி பாரண்ஹீட் அளவிற்கு வெப்பம் பதிவானது. இதே போல் 15 க்கும் அதிகமான மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகி இருந்தது. திருச்சி

மாவட்டத்தை பொருத்தவரை பல்வேறு இடங்களில் 12 மணி முதல் 4 மணி வரை மிகக் கடுமையாக வெயில் நிலவியது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களின் சென்றவர்கள் அனைவரும் கடுமையான வெப்பத்தில் சிக்கினர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 43.1 டிகிரி செல்சியஸ் வரை அதாவது 109.5 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் பதிவானது. இது சுமார் 128 ஆண்டுகளுக்கு பின் இது போன்று வெப்ப நிலை பதிவாகி உள்ளது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் 11 மணி முதல் 4 மணி வரை வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் போன்றவர்களை வெளியே அழைத்து வர கூடாது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

கரூர், திருச்சி, பெரம்பலூர் ,புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் உயர்ந்து கடுமையான வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. அடுத்த 10 நாட்கள் கடுமையாக வெயில் இருந்தாலும் 10-ந் தேதிக்கு பின்னர் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!