Skip to content
Home » ஒரு காலத்தில் பிரபல நடிகர்… இப்போது டாக்சி டிரைவர்..

ஒரு காலத்தில் பிரபல நடிகர்… இப்போது டாக்சி டிரைவர்..

  • by Senthil

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான ‘காதல் தேசம்’, படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மிர்சா அப்பாஸ் அலி என்ற முழுப்பெயர் கொண்ட அப்பாஸ், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் இந்திய நடிகரும் மாடலும் ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் சில மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்திலும் நடித்து உள்ளார்.  இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் சில மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்திலும் நடித்து உள்ளார்.  1996 ஆம் ஆண்டு கதிரின் காதல் தேசம் மூலம் அப்பாஸ் அறிமுகமானார்.இவருக்கு முதல் படத்திலேயே அதிக பெண் ரசிகர்கள் உருவானார்கள். விஐபி, பூச்சூடவா, ஜாலி. கமலுடன் ஹேராம், பம்மல் கே சம்மந்தம், ரஜினியுடன் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக கருதப்பட்ட அப்பாஸ், போதிய வாய்ப்பு இல்லாத நிலையில், குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது நியூசிலாந்தில் பைக் மெக்கானிக்காகவும் டாக்சி டிரைவராகவும் அவர் பணியாற்றி வருகிறார். கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சகல்லம் என்ற படத்தில் நடித்திருந்தார்.இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சினிமா துறையில் இருந்து வரும் பணத்தில் வாழ்வதே சிரமமாக இருந்தது. இதனால் அதில் இருந்து விலகி குடும்பத்துடன் நியூசிலாந்து சென்றதாக நடிகர் அப்பாஸ் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!