Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு தினம்

 ராமேசுவரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, இஸ்ரோ விஞ்ஞானியாக வளர்ந்து,  இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை  பணியாற்றினார்.

“ஏவுகணை விஞ்ஞானி”, “மக்களின் குடியரசுத் தலைவர்” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அவரது “அக்னி சிறகுகள், இந்தியா 2020” உள்ளிட்ட புத்தகங்கள் பல இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டக்கூடியதாக திகழ்கிறது. 1981-ல் பத்ம பூஷண், 1990-ல் பத்ம விபூஷண், 1997-ல் பாரத ரத்னா விருது பெற்றவர்.

மாணவர்களுடன் உரையாடுவதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவ்வாறே 2015 ஜூலை 27-ம் தேதி  மேகாலயா தலைநகர் ஷில்லாங் ஐஐஎம்-ல்மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார். அவருக்கு இன்று 9 வது நினைவு தினம். இதையொட்டி ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று குடும்பத்தினர் சிறப்பு  பிரார்த்தனை  நடத்தினர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!