மாணவர்களுக்கு எதிரான அநீதி, தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்துச் சமூக வலைதளங்களில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் அபிஜித் தீப்கே தொடங்கிய கணக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் இணைந்து அவர் அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் என்பதே தங்களின் ஒரே நிபந்தனை என்றும், அதுவரை போராட்டம் ஓயாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் போராட்டம் தொடர்வதால் ஜந்தர் மந்தரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. தன்னை போலீசார் கைது செய்தாலும், நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் அறவழியில் போராட்டத்தைத் தொடர வேண்டும் என அபிஜித் தீப்கே வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
