நடிகர் அஸ்வின் குமார், மறைந்த பிரபல இயக்குநர் ராஜசேகரின் பேத்தி புவனேஸ்வரியை இன்று (நவ., 20) கோயம்புத்தூரில் திருமணம் செய்துகொண்டார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின், தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். இந்தத் திருமண விழாவில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ராஜசேகர் ரஜினிகாந்தின் ‘படிக்காதவன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல டைரக்டரின் பேத்தியை மணந்தார் நடிகர் அஸ்வின் குமார்
