Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் விஜய் ஆன்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி  மகள்  லாரா (17), பிளஸ் 2 படித்து வந்தார். விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 3 மணிக்கு லாரா, வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இன்று காலை லாராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்காததால் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று லாராவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் லாரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!