Skip to content
Home » என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்

என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்

1992ம் ஆண்டு கார்த்திக் ஜோடியாக நாடோடி தென்றல் படம் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. ஜெய்ஹிந்த்,கர்ணா படங்களில் அர்ஜூன்,தோழர் பாண்டியன்,அமைதிப்படை உள்பட ஏராளமான  படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரஞ்சிதாவின் தந்தை அசோக் குமாரும் ஒரு நடிகர்தான் இவர் சுமார் 25 க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்து உள்ளார்.

சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று அளித்த பேட்டியில் தன்னைப் பற்றிய பல விஷயங்களைக் அவர் கண்ணீர் மல்க கூறினார். தனது மனைவி, (ரஞ்சிதாவின் தாயார்) மரணத்துக்கு காரணமே ரஞ்சிதா தான் என்று அப்போது அவர் கூறியது கண்ணீரை வரவழைத்தது.

இது தொடர்பாக அசோக்குமார் கூறியதாவது:முதலில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தேன். பின்னர் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஐதராபாத்தில் ஓட்டல் நடத்தினேன்.  அது சரியாக வரவில்லை என்றதால் நான் சென்னை வந்தேன். நான் வில்லனாகவும், துணை நடிகராகவும் படங்களில் நடித்துள்ளேன். 40 வயதில் 25 படங்கள் நடித்துள்ளேன். என்னை ஹீரோவாக வைத்து படம் பண்ணுவேன் என்றார் ராமாநாயுடு.

அக்கினேனி நாகேஸ்வரராவ் சொன்ன அறிவுரையால் என்னை நீக்கிவிட்டு ஜக்கையாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். இதுபோன்ற சில சம்பவங்களால் எனது சுயமரியாதை பாதிக்கப்பட்ட்டது. நான் இந்த துறைக்கு வந்து தவறு செய்துவிட்டதாக உணர்ந்தேன். அதனால்தான் நான் சினிமாவை விட்டு விலகினேன்.

என் குடும்பமே எனக்கு எதிரி. பெண் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திருமணம் செய்து கொண்டேன். இதன் காரணமாக வேலையை ராஜினாமா செய்தேன். பல வருடங்களுக்கு முன்பே தவறை உணர்ந்தேன். என்னால பொண்ணு கஷ்டப்படுறதால என்னோட பொண்ணை சென்னைக்கு கூட்டி வந்தேன். எங்களுக்கு மூணு பொண்ணு. நிர்மலா.. ரஞ்சிதா.. ஜோதி. இரண்டாவது பெண்ணான ரஞ்சிதா, நித்யானந்தாவை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த  நித்தியானந்தா சாமியாரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒன்று உண்மை.. நித்யானந்தாவால் தான் காதலித்து திருமணம் செய்தவரை விவாகரத்து செய்தார் ரஞ்சிதா.

கோபத்தில் நித்யானந்தாவிடம் சென்றேன். வெட்கமாக இல்லையா? என் மகளை உங்கள் ஆசிரமத்தில் இருந்து திருப்பி அனுப்புங்கள் என்றேன். என் கோபத்தையும் வலியையும் புரிந்துகொள்பவர்கள் யாரும்  அங்கு இல்லை. என் இரண்டு மகள்களும் நித்யானந்தாவின் மாயையைப் பின்பற்றினார்கள். இன்னும் அவருடன் இருக்கிறார்கள். இதையெல்லாம் தாங்க முடியாமல் என் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். என் மூன்றாவது மகள் என்னை கவனித்துக் கொள்கிறாள். மற்ற இருவரும் எனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை. பொருளாதார ரீதியாக எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என் கடைசி மகள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறாள் என அசோக்குமார் உணர்ச்சிவசப்பட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!