Skip to content
Home » பிரபல தமிழ் நடிகையின் மகன் மர்ம சாவு….

பிரபல தமிழ் நடிகையின் மகன் மர்ம சாவு….

  • by Senthil

 தமிழ்த்திரையுலகில் 80களில் கவர்ச்சி புயலாய் வலம் வந்தவர்  நடிகை மாயா. சில காலம் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தார். சிவாஜி நடித்த அமர காவியம், ரஜினி நடித்த கர்ஜனை உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர் மாயா.

நடிகை மாயாவின் மகன்  விக்கி  என்கிற விக்னேஷ்குமார்(40)இன்று  வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  விக்கி  ரவுடி பட்டியலில் இருந்தார்.  போலீசை தாக்கியது உள்பட பல குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் தனியாக வசித்து வந்த விக்னேஷ்குமார் படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தசரதபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!