ஸ்பாவில் தனது தாலிச்செயின் காணாமல் போனதாகவும், அதுகுறித்து கேட்டதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் நடிகை வினோதினி வேதனை தெரிவித்துள்ளார். சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள வீடியோவில், மசாஜ் செய்வதற்கு முன்பு தாலிச்செயினை அங்குள்ள ஒரு டப்பாவில் வைத்தேன். 2 நாள்களுக்கு பின்புதான் செயின் காணாமல் போனதை கவனித்தேன். ஸ்பாவுக்குச் செல்லும் பெண்கள் கவனமாக இருங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
