Skip to content
Home » ” நீ போலீசு தான அதிமுக காணாம போனா கண்டுபிடிச்சு கொடு”

” நீ போலீசு தான அதிமுக காணாம போனா கண்டுபிடிச்சு கொடு”

  • by Senthil

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை புரசைவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர்,  எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ளம் வராது என்று  முதல்வர் ,அமைச்சர்கள், மேயர் எல்லோரும் கூறினார்கள் . மிக்ஜாம்  புயலின் ஒரு நாள் மழைக்கு சென்னை வெள்ளத்தில் மிதந்தது.  அதிமுகவை பற்றி விமர்சித்துக் கொண்டிருக்கும் முதல்வர்  ஸ்டாலின் தனது ஆட்சியில் செய்ததை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. பல சரக்கு விலை கடந்த ஆறு மாதங்களில் 48% உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக ஆட்சி எல்லாத் துறைகளிலும் ஊழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் எளிதாக கிடைக்கிறது.  பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா விற்ற 2138 பேரை கண்டுபிடித்துள்ள இந்த அரசு 148 பேரையும் மட்டும் கைது செய்துள்ளது.  திமுக அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவர் போதைப் பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை.  2021 தேர்தலின் போது திமுக அளித்த 520 வாக்குறுதிகளை 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை  மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. அதை ஏன் என்று முதல்வர் கேட்கவில்லை.  நாங்கள் அல்ல நீங்கள் தான் கள்ளக் கூட்டணி வைத்துள்ளீர்கள்.  முதல்வர் அறிவித்த படியும் பெட்ரோல் விலை முழுமையாக குறைக்கப்படவில்லை.  டீசல் விலையை அறவே குறைக்கவில்லை.

நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது.  ஆனால் அரசியலுக்கு  வந்து ஐந்து ஆண்டுகள் கூட ஆகாத ஒருவர் 2024 தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்கிறார். தம்பி உன்னை போல எத்தனையோ பேரை அதிமுக பார்த்துள்ளது. காணாமல் போனால் நீ போலீஸ் தானே கண்டுபிடித்து கொடு.  விரக்தியின் விளிம்பில் தான் இப்படி பேசுகிறார்.  பொறுமையாக பேசு. அதிமுகவில் 2.16 தொண்டர்கள் உள்ளனர். உங்கள் கட்சியில் விரல்விட்டு எண்ணும்  அளவிலே உள்ளனர். எதை பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள்.  உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுகவை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள்  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!