Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோட்டில் இரட்டை இலை சின்னம் முடங்குகிறது?…

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. இரு அணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது என்பது தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்துள்ளது. எனவே இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் தரப்புக்கு ஒதுக்குவதா, இல்லை ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கவதா என்பதை ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார். இருதரப்பும் உரிமை கொண்டாடுவதால், சின்னத்தை முடக்கி வைக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!