அதிமுகவின் திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களைக் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில், அதிமுக மாவட்ட கழக துணைச் செயலாளரும்,மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே என் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட வருமான கருமண்டபம் பத்மநாதன், உறையூர் பகுதி செயலாளர் என்.எஸ்.பூபதி (எ) பூபேந்திரன், ஜங்ஷன் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி, இளைஞர் பாசறை மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை வினோத்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சேட்டு, அதிமுக இளைஞர் அணி முன்னாள் மாவட்ட துணை செயலாளர் தென்னூர் ராஜா, முன்னாள் மாவட்ட அ.தி.மு.க பிரதிநிதி உய்யக்கொண்டான் திருமலை பால்ராஜ், மதிமுக ராஜா மற்றும் நிர்வாகிகள்
தமிழக வெற்றி கழகத்தின் டெல்டா மண்டல பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான கு. ப. கிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து, தங்களை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டனர்
பின்னர் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-
தமிழக முதலமைச்சர் விஜய் காலையில் 9:30 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார் தினமும் ஒவ்வொரு துறையை ஆய்வு செய்து வருகிறார். அதன் முடிவுகளும் அன்றைய தினமே தெரிய வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிட வாய்ப்புள்ளதா என கேட்கிறீர்கள்.
இந்த தொகுதியில் தமிழக முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது அவரது பிரதிநிதியாக யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவார்கள். தமிழக வெற்றி கழகம் மூன்று டிஜிட் நம்பரில் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது திமுக இரண்டு டிஜிட் நம்பரில் தான் வெற்றி பெற்றுள்ளது ஆகவே மு க ஸ்டாலின் போட்டியிட்டாலும் இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தான் வெற்றி பெறும். மக்களின் எதிர்பார்ப்புகளை விஜய் பூர்த்தி செய்வார் ஊழலுக்கு தூய்மையான அரசை தருவோம்.
தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்களித்த அத்தனை எம்எல்ஏக்கள் பதவிகளையும் எடப்பாடி யார் பரித்துள்ளார் ஆனால் ஒருவரது பதவியை மட்டும் அவர் பறிக்கவில்லை அதற்கான காரணத்தை அவர் தெரியப்படுத்த வேண்டும்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திருச்சியில் அதிமுகவிலிருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணையும் இந்த சம்பவம், மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
