அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதை கண்டித்தும், ஆள் குறைப்பு நடவடிக்கையை கண்டித்தும், அரசாணை 139 மற்றும் 152 யை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் துப்புரவு பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் துப்புரவு பணியாளர்கள் வாழ்வா சாவா என்ற கேள்வியை முன்வைத்து வாழ்வாதார உரிமைகளை பறிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.