Skip to content
Home » ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு…..விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு…

ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு…..விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு…

பழைய ஆயக்கட்டின் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரி விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிஏபி தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக உயர்ந்தது.

விவசாயிகளின் கோரிக்கையை நேற்று ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடபட்டது, ஜனவரி பத்தாம் தேதி முதல் மார்ச் மாதம் 10 – ம தேதி வரை உள்ள 60 நாட்களில் 30 நாட்களுக்கு 350

மில்லியன் கன அடிக்கு மிகாமல், தினமும் 125 கன அடி முதல் பாசன நீர் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்த விட அரசு உத்தரவிட்டது.

இதனயைடுத்து பள்ளிவிளங்கால், காரப்பட்டி, அரியாபுரம், பெரியணை ,வடக்கலூர் ஆகிய பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால் மூலம் ஆனைமலை டெல்டா பகுதியில் உள்ள 6400 ஏக்கரில் உள்ள நிலை பயிர்கள் பாசன பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஆழியாறு வடிகால் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலு. காடம்பாறை அணை மின் உற்பத்தி நிலைய நிர்வாக பொறியாளர் ராம்பிரகாஷ் ஆழியாறு அணை உதவி செயற்பொறியாளர் கார்த்திக் கோகுல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் , விவசாயிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!