Skip to content
Home » அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் ரஜினி….. நியூ லுக்கில் செம்ம தலைவா….

அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் ரஜினி….. நியூ லுக்கில் செம்ம தலைவா….

  • by Senthil

நீடா அம்பானி துவங்கியுள்ள கலாச்சார மையம், மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் பிரம்மாண்டமான திறக்கப்பட்டது.

பல வருடங்களாகவே இப்படி ஒரு கல்சுரல் சென்டரை துவங்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்த இவர், தற்போது தன்னுடைய கனவுக்கு உயிர் கொடுத்து, இந்த பிரமாண்டகலாச்சார மையத்தை துவங்கியுள்ளார்.

இதனை திறப்பதற்கான வேலைகள் 3 நாட்களாகவே மிகவும் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், நேற்று நடந்த திறப்பு விழாவில், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் முதல் கொண்டு பலர் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இந்த கலாச்சார மையம் குறித்து  நீடா முகேஷ் அம்பானி கூறுகையில், இது ஒரு புனித பயணம் போன்றது. சினிமா, இசை, நடனம், நாடகம், இலக்கியம், கைவினைப் பொருட்கள், அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகியவை சார்ந்து இங்கே ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாகவே இந்த, கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதே போல் இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் வெளிப்படுத்தும் இடமாகவும், உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்காக இடமாகவும் இது திகழும் என கூறியுள்ளார்.

நீடா அம்பானியின் கனவாக இருந்த இந்த கலாச்சார மையம் குறித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு, அம்பானியின் மகள் இஷா அம்பானி வெளியிட்டார். இங்கு, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் உள்ளது போன்றே… தற்போது உலக தரம் வாய்ந்த கலாச்சாரா மையஹே, இந்திய கலைஞர்களுக்காக, அமைத்து கொடுத்துள்ளார் நீடா அம்பானி.

மேலும் இங்கு 2,000 இருக்கைகள் கொண்ட பிரமாண்ட திரையரங்கு, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட 250 இருக்கைகள் கொண்ட ஸ்டுடியோ தியேட்டர், மற்றும் டைனமிக் 125-இருக்கை கொண்ட கியூப். ஆகியவை இடம்பெற்றுள்ளது .

இது நான்கு மாடிகள் கொண்ட பிரத்யேக விஷுவல் ஆர்ட்ஸ் ஸ்பேஸ் -ஆர்ட் ஹவுஸ் இடம்பெற்றுள்ளது. அதே போல் கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்க படும் பொருட்கள், மற்றும் பார்வையற்றவர்களால் தயாரிக்கப்படும், மெழுகு வத்திகளும் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியின் பிரமாண்ட துவக்க விழாவில், முகேஷ் அம்பானி பிள்ளைகள், இஷா அம்பானி, அவரின் கணவர், மகன்கள் ஆகாஷ் அம்பானி ஆனந்த் அம்பானி ஆகியோர் தங்களின் மனைவிகளோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருகான் குடும்பத்தினர், ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், ரித்திக் ரோஷன், ப்ரியங்கா சோப்ரா, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய பாரம்பரியத்தின் அடையாளங்களான நடனம், நாடகம், இசை, கலை மற்றும் பலவற்றின் மூலம் இந்தியாவின் கலைகளை விவரிக்கும் விதமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பெரோஸ் அப்பாஸ் கானின் தி கிரேட் இந்தியன் மியூசிகல்: நாகரிகம் தேசம் என்ற இசை நிகழ்ச்சி, ஏப்ரல் 3, மாலை 7.30 மணிக்கு கிராண்ட் தியேட்டரில் நிகழ்த்தப்படும் என்றும் தற்கான டிக்கெட் விலை 400 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் இந்திய உடைகளில் ஃபேஷன் ஷோ, இந்தியாவில் தாக்கம் செலுத்திய சமகால கலைஞர்களின் படைப்புகளைக் கொண்டாடும் சங்கமம் கலைக் கண்காட்சிகள் போன்றவை வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கு 199 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!