ஜெய்ப்பூரில் உயிரிழந்த நபரின் உடலை உத்தரப் பிரதேச மாநிலம் காசிபூருக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றபோது, பாரபங்கி மாவட்டம் காராவங் அருகே பூர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற டெம்போ மீது ஆம்புலன்ஸ் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸில் பயணித்த 3 உறவினர்கள் மற்றும் 2 ஓட்டுநர்கள் என மொத்தம் 5 பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உபியில் டெம்போ மீது ஆம்புலன்ஸ் மோதி 5 பேர் பலி
