தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தர லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் 3 நாள் போலீஸ் காவல் முடிந்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (நவ.4) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போலீசார் தன்னை துன்புறுத்தினார்களா? என நீதிபதி கேட்டதற்கு,‘துன்புறுத்தல் ஏதும் இல்லை’ என பதிலளித்தார். மேலும், உணவு முறையாக வழங்கப்பட்டதா? என்ற கேள்விக்கும் முறையாக வழங்கப்பட்டதாக அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
அன்பில் மகேஸுக்கு நவ.6 வரை நீதிமன்றக் காவல்
