தற்போதைய தென்னிந்திய சினிமாவின் டாப் மியூசிக் டைரக்டர்கள் என்றால் அது அனிருத்தும் தமனும் தான். இரு வேறு ஸ்டைலில் தரமான சம்பவம் பண்ணும் இருவரும் தற்போது ஒரே படத்தில் பணியாற்றவுள்ளனர். சல்மான் கான் நடிப்பில் ‘வாரிசு’ இயக்குநர் வம்சி இயக்கும் பான் இந்திய படத்தில் தான் இருவரும் பணியாற்றவுள்ளனர். படத்திற்கு அனிருத் பின்னணி இசையமைக்க, தமன் பாடல்களுக்கு இசைக்கவுள்ளார். எப்படி இருக்கும் இந்த காம்போ?
