கரூரில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுக்க வலியுறுத்தி அண்ணாமலை மேற்கொண்ட நடைப்பயணத்தின் போது, தொண்டர் ஒருவரை அவரது உதவியாளர் சரமாரியாக தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடைப்பயணத்தின் போது அண்ணாமலையை நெருங்க முயன்ற தொண்டரை பிடித்து, அவரது உதவியாளர் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம், அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டரின் கன்னத்தில் அறைந்த அண்ணாமலையின் உதவியாளர்
