கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக G Pay பரிமாற்றத்தில் 16 லட்சத்து 33 ஆயிரம் பறிமுதல்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. வட்டாட்சியகராக பிரகாஷ் பணியாற்றி வருகிறார்.
சாமிநாதன் மற்றும் தங்கமணி உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கதவுகளை மூடி சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், வட்டாட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள இடங்களில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் ஒருசில நபர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று மாலை 5 மணியளவில் தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 4 மணிவரை தொடர்ந்து நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்திலேயே அதிகபட்சமாக gpay ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாக 16 லட்சத்து 33 ஆயிரத்து 654 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
