Skip to content
Home » ஏப் 15 முதல் மீன்பிடி தடைகாலம் ….. மயிலாடுதுறை கலெக்டர்…..மீனவர்களுக்கு அறிவிப்பு.

ஏப் 15 முதல் மீன்பிடி தடைகாலம் ….. மயிலாடுதுறை கலெக்டர்…..மீனவர்களுக்கு அறிவிப்பு.

2024 -ம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய 61 நாட்களுக்கு  விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடைசெய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மேற்காணும் தடைசெய்யப்பட்ட 61 நாட்களுக்கும் கடலுக்கு மீன்பிடிக்க கூடாது எனவும், கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி மேற்குறிப்பிடப்பட்டுள்ள 61 நாட்கள் முடியும் வரை மயிலாடுதுறை மீனவர்கள் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்லக்கூடாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், மீன்பிடி தடைகாலம்  அமலுக்கு முன்னர் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் வரும் 14-04-2024  நள்ளிரவு 12 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப அனைத்து படகுகளுக்கும் அறிவுறுத்திடவும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் மூலம் அப்படகில் உள்ள மீனவர்களுக்கு  தகவல்கள் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனடியாக கரைக்கு திரும்பிட தெரிவித்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது . இந்த தகவலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!