Skip to content
Home » ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

  • by Senthil

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த பதக்கத்தின் மூலம் பதக்கபட்டியலில் இந்தியாவின் தங்கம் 16 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை 2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் கொரியா அணிகள் மோதியது. இந்தியா சார்பாக வில்வித்தை வீரர்களான ஜோதி சுரேகா வென்னம் மற்றும் ஓஜஸ் டியோடலே ஆகியோர் கலந்துகொண்டனர். கொரியா சார்பாக சோ சேவோன் மற்றும் ஜூ ஜேஹூன் ஜோடி விளையாடியது.

இதில் இந்திய வீரர்கள் 2வது சுற்றைத் தவிர மற்ற அனைத்திலும் புள்ளிகள் எடுத்தனர். ஆனால் கொரிய வீரர்கள் 3 சுற்றுகளில் 39 புள்ளிகளும், 1 சுற்றில் மட்டும் 38 புள்ளியும் எடுத்தது. இதனால், ஜோதி மற்றும் ஓஜஸ் டியோடலே ஜோடி 159 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தது. கொரியாவின் சோ சேவோன் மற்றும் ஜூ ஜேஹூன் ஜோடி 158 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாம் இடம் பிடித்தது.

archery

இதனால் இந்திய வில்வித்தை அணி தங்கம் வென்றது. கொரியா வில்வித்தை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இது ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியாவின் இரண்டாவது வில்வித்தை தங்கப் பதக்கம் ஆகும். இந்த போட்டியைத் தொடர்ந்து, அக்டோபர் 7ம் தேதி காலை 6:30 மணி முதல் தங்கப் பதக்கத்திற்கான தனிப்பட்ட ஆட்டங்களில் இந்தியா பங்கேற்கும்.

இந்த நிலையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியா 71 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதே போல சீனா 164 தங்கம், 90 வெள்ளி, 46 வெண்கலம் என 300 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!