Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகராட்சியில் வார்டுகளில் பகுதி சபா கூட்டம்

பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான இன்று (15.09.2026) திருச்சி மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு ரங்கநாதபுரம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்து , பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்ட றிந்து மனுக்களை பெற்றார். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் தெரிவித்தார் .

முன்னதாக மேயர் மு. அன்பழகன் அவர்கள் 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும்மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். திருச்சி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப்

பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.

error: Content is protected !!