Skip to content
Home » அரியலூரில் பிறப்பு -இறப்பு பதிவு குறித்து அலுவலகங்களில் ஆய்வு…

அரியலூரில் பிறப்பு -இறப்பு பதிவு குறித்து அலுவலகங்களில் ஆய்வு…

  • by Senthil

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆணி மேரி சுவர்ணா  அறிவுறுத்தலின்படியும் பொது சுகாதாரத்துறை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அஜிதா அவர்களுடைய உத்தரவின் படியும் திருமானூர் வட்டாரத்தில் கிராமப் பகுதியில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகங்களில் பிறப்பு இறப்பு பதிவு குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது. அரியலூர் மாவட்ட உதவி இயக்குனர் புள்ளியல் திருமதி சங்கீதா அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கீழப்பழுவூர் மேலப்பழுவூர் மற்றும் பூண்டி கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்

அலுவலகங்களில் பிறப்பு இறப்பு பதிவு குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யப்படும் பொழுது கட்டாயமாக ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்திட வேண்டும் எனவும், இறப்பு சான்றிதழ் வழங்கும்போது இறப்பிற்கான காரணம் குறித்த மருத்துவரின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும், அனைத்து பதிவாளர் அலுவலகங்களிலும் பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகம் என்ற பெயர் பலகையும் அணுக வேண்டிய நேரம் குறித்த தகவலும் அலுவலக முகப்பில் தெரியுமாறு எழுதப்பட்ட விளம்பரம் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் மற்றும் கீழப்பழூர் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் நரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!