Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாடுதுறை மாவட்டம் கம்பர் மேடு பகுதி மற்றும் தஞ்சாவூரில் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்கு ரோடு வழியாக சென்றார். இந்நிலையில் தொடர்ந்து மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டும் பாஜக அரசின் பிரதிநிதியாக செயல்படும் தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர் என் ரவிக்கு கருப்பு கொடி காட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமையிலான 20க்கும் மேற்பட்டோர்

முயற்சித்தனர். அப்போது அங்கே பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் கருப்புக்கொடி காட்ட முயற்சித்த விசிகவினரை போலிசார் கைது செய்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 30 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்த 50 பேரையும் மீன்சுருட்டி தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!