Skip to content
Home » அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

அரியலூரில்  சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வரப்பெற்றதை தொடர்ந்து வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியில் கூட்டு தணிக்கை மேற்கொண்டனர். இதில் கால்தடம் ஏதும் தெளிவாக கிடைக்கப்பெறாத நிலையில் 11.04.2024 இரவு 9.00 மணியளவில் செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து இரவு 11 மணியளவில் அரசு மருத்துவமனை மருத்துவர் வீட்டின் அருகே சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது.

இதனைத் தொடர்;ந்து பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மூலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுப்பட்ட ஒரு குழுவினர் செந்துறை வரவழைக்கப்பட்டு ட்ரோன்கள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சுற்றுப்புற கிராமமக்கள் இரவு நேரங்களில் தனியே செல்வதை தவிர்த்து குழுவாக செல்வதுடன் கைவிளக்கும் எடுத்துச் செல்லுமாறும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது மேலும் இச்சூழ்நிலையை பயன்படுத்தி தேவையற்ற வதந்தி பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பான தகவலை 63852 85485 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!