Skip to content
Home » பெரம்பலூர், துறையூருக்கு நிச்சயம் ரயில் வரும்…… பாரிவேந்தர் உறுதி

பெரம்பலூர், துறையூருக்கு நிச்சயம் ரயில் வரும்…… பாரிவேந்தர் உறுதி

  • by Senthil

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வீதி வீதியாகச் சென்று, தாமரை சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் முசிறி அடுத்த உமையாள்புரம், செவந்தி லிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து, வெள்ளூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வாணவேடிக்கை முழங்க, பட்டாசு வெடித்து கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, காமாட்சிபட்டி கிராமத்திற்கு வருகை தந்த பாரிவேந்தருக்கு, கூட்டணிக் கட்சியினர் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய டாக்டர் பாரிவேந்தர்,  5 ஆண்டுகளில் தொகுதிக்கு செய்த பல்வேறு நலத்திட்டங்களை புத்தகமாக வெளியிட்டிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

அரியலூர் – பெரம்பலூர் – துறையூர் – நாமக்கல் பகுதிகளை இணைக்கும் ரயில்வே திட்டம் நிச்சயமாக கொண்டு வரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து, தண்டலைப்புத்தூர் பகுதியில் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய டாக்டர் பாரிவேந்தர், தன் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்றைக்கும் வீண் போகாது எனத் தெரிவித்தார். மத்திய அரசுக்கு

பெரம்பலூர் தொகுதிக்கு வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடி ரூபாயை முழுமையாக மக்கள் திட்டங்களுக்காக செலவு செய்துள்ளதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார். கல்வி தெய்வமான சரஸ்வதி அமர்ந்திருக்கும் பீடமான தாமரைக்கு வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து IJK தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து புமுதேரி, வடசேரி , பில்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், இம்முறை வெற்றி பெற்றால் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம்10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு திட்டத்தை மக்கள் உயர் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்.

மேலும் பேரூர் பகுதியில் இடிந்துள்ள கான்கிரீட் வீடுகளை பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சரி செய்து கொடுக்கப்படும் எனவும் சாலை விரிவாக்க பணி மற்றும் தொகுதிக்கு தேவையான அனைத்து பணிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் ரவி பச்சமுத்து கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!