Skip to content
Home » தண்டனை கைதியை போலி என்கண்டர் செய்ய உள்ளதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி.

தண்டனை கைதியை போலி என்கண்டர் செய்ய உள்ளதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி.

  • by Senthil

மதுரையை சார்ந்த ஜெயக்கொடி என்பவர் திருச்சி பிரஸ் கிளப்-ல் செய்தியாளர்களை சந்தித்தார்… இதில் என்னுடைய மகன் வெள்ளகாளி என்ற காளிமுத்து (வயது 36) அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு குற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் காவல் துறையினர் போலியாக என் மகனை என்கவுண்டர் செய்ய இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், சென்றவாரம் சிறையில் செல்போன் பயன்படுத்துவதாக பொய்யான குற்றாச்சாட்டை கூறி என் மகனுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள்.

அதேபோல் அடிக்கடி என் மகனை வெளி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். மேலும் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது தப்ப முயன்றதாகவும் வேறு வழியில்லாமல் காவல்துறையினர் என்கவுண்டர் செய்ததாக வழக்கை முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே நாங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதித்து நடக்கின்றோம். ஆனால் காவல்துறையினர் சிலர் ஸ்ரீபெரும்புத்தூரில் கிளாய் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விஷ்வாவை போலியாக என்கவுண்டர் செய்தது போல , என் மகனை போலியாக என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு உள்ளனர். குறிபாக எதிரிகளிடமிருந்து காவல்துறையினர் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு என் மகனை எண்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எனவே என் மகனின் உயிருக்கு எதாவது விபரீதம் ஏற்பட்டால் முழுக்க முழுக்க காவல் துறையும், சிறைக்காவல் துறையும் முழு பொறுப்பு.
எனது மகன் உயிரை காப்பாற்ற உதவி செய்யுங்கள் கண்ணீர் மல்க தாய் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!