Skip to content
Home » நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பிரபல நடிகருடன் காதல்….

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பிரபல நடிகருடன் காதல்….

கட்டா குஸ்தி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒரு போட்டோவை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. அவர் நடிப்பில் வெளியான ‘மாயநதி’, ‘வரதன்’, ‘காணக்காணே’ உள்ளிட்ட மலையாளப் படங்கள் விமர்சன ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. தமிழில் ‘ஆக்ஷன்’ ‘ஜகமே தந்திரம்’ ‘கார்கி’ படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். குறிப்பாக, பொன்னியின் செல்வனில் ‘பூங்குழலி’ கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மியின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ‘இதய’ குறியீடுடன் பகிர்ந்துள்ளார். இதனால் , இருவரின் ரசிகர்களும் ‘காதலுக்கு வாழ்த்துக்கள்’ என

 

Aishwarya Lekshmi : பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக கலக்கிய ஐஸ்வர்யா  லட்சுமியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் இதோ

கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.ஐஸ்வர்யா லட்சுமி தனது அறிவிப்பால் பல ரசிகர்களின் இதயங்களை உடைத்துள்ளார்.

சில ரசிகர்கள், இது ஏதாவது படத்திற்கான விளம்பரமா என்று ஆர்வமாக கேட்டனர். “இது வெறும் திரைப்பட அறிவிப்பு என்று கூறுங்கள்! என ஒரு ரசிகர் கேட்டு உள்ளார். ஆனால், இது வெறும் நட்பா இல்லை காதலா என ஐஸ்வர்யா லக்ஷ்மி எதுவும் சொல்லவில்லை! ஐஸ்வர்யா லட்சுமி. இந்த போட்டோ த ற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!