Skip to content
Home » ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்று சாதனை படைக்கிறது இந்தியா…

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்று சாதனை படைக்கிறது இந்தியா…

  • by Senthil

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியனான ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.  தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணி நேரடியாக தகுதி பெற்றது. மேலும் ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிதங்கப் பதக்கம் வெல்வது இது4-வது முறை. இதற்கு முன்பு 1966,1998, 2014-ம் ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளது. அதேபோல் ஆடவருக்கான டி-20 கிரிக்கெட் அரை இறுதி சுற்றில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 96 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அனிக் ஜா 24, இமோன் 23 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் சாய் கிஷோர் 3, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். எளிதான இலக்கை விரட்டிய இந்திய அணி 9.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களும், திலக் வர்மா 26 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் விளாசினர். இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. ஆசிய விளையாட்டு போட்டியின் 13-வது நாளான நேற்று பதக்கபட்டியலில் இந்தியா 22 தங்கம்,34 வெள்ளி, 39 வெண்கலம் என 95 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தில் தொர்ந்து நீடித்தது. இன்னும் 2 நாட்கள் போட்டி உள்ளதால் இந்திய அணி 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து சாதனை படைப்பது உறுதியாகி உள்ளது. கபடியில் 2 பதக்கம், வில்வித்தையில் 3 பதக்கம், பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் பதக்கம், ஆடவர் கிரிக்கெட்டில் பதக்கம்ஆகியவற்றை இந்தியா கைப்பற்றுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாட உள்ளது. மல்யுத்தத்தில் 4 பேர் கலந்து கொள்ளும்போட்டியும் இருக்கிறது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் அதிகபட்சமாக 2018-ல் ஜகார்த்தாவில் நடந்த போட்டியில் இந்தியா16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலத்துடன் 70 பதக்கங்கள் வென்றது. தற்போது முதல்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் வென்று சாதனை படைக்க உள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!