Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராகுல் காந்தியை திடீரென புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜூ..

தமிழகத்தில் அதிமுக சில ஆண்டுகளாக பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது. நடப்பு லோக்சபா தேர்தலில் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை அழைத்து அவர்களுடன் கூட்டணி வைக்க அதிமுக முயற்சி மேற்கொண்டது.  ஆனால், திமுக கூட்டணியில் இருந்து அந்த கட்சிகள் வெளிவர தயக்கம் காட்டியதால், தேமுதிக உடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் வீடியோவை பகிர்ந்து, ”நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” எனப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராகுல் ஒட்டல் ஒன்றில் மக்களுடன் எளிமையாக அமர்ந்து சாப்பிடுகிறார். இதனால் காங்கிரஸ் மற்றும் ராகுலை அதிமுக மறைமுகமாக ஆதரிப்பதாக கூறப்படுகிறது.  செல்லூர் ராஜீவின் இந்த டிவிட்டர் பதிவிற்கு விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் அண்ணனுக்கு நன்றி என பதில் டிவிட் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!