நடிகை ஆயிஷா கான், வெள்ளை நிற ஆடை மற்றும் மோதிரத்துடன் இருக்கும் புகைப்படங்களை ‘கனவு’ என பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக நினைத்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மில்லியன் கணக்கான லைக்குகளை பெற்றன. ஆனால், அவை உண்மையான நிச்சயதார்த்த நிகழ்வை சேர்ந்தவை அல்ல என்றும், ஒரு நகை நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட விளம்பர புகைப்படங்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்
ஆயிஷா கான் நிச்சயதார்த்தம்?.. வைரலான புகைப்படங்கள்
