Skip to content
Home » இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் நல்லகண்ணு…. நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் நல்லகண்ணு…. நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நல்லகண்ணுவை இன்று நேரில் சந்துத்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

நல்லக்கண்ணு உதயநிதி ஸ்டாலின்
நல்லக்கண்ணு உதயநிதி ஸ்டாலின்
இந்த சந்திப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, “ விடுதலைப் போராட்டத் தியாகியும் – முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நேரில் இன்று வாழ்த்தினோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணங்கள் – முதற்கட்ட இழப்பீடுகளை வழங்கி வந்துள்ள நிலையில், அங்குள்ள கள நிலவரங்களை நல்லகண்ணு அக்கறையுடன் கேட்டறிந்தார்கள். அங்கு, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க கழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விளக்கிக் கூறினோம்.

விடுதலைப் போராட்டத் தியாகியும் – முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ அய்யா நல்லகண்ணு அவர்களின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நேரில் இன்று வாழ்த்தினோம்.

போராட்டக் குணம், எளிமை, ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதி என இளையத் தலைமுறைக்கு வழிகாட்டும் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான நல்லகண்ணு நூற்றாண்டையும் கடந்து மேலும் பல்லாண்டுகள் நமக்கெல்லாம் வழிகாட்டட்டும்.’ என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!