Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல்செய்ததாக கடந்த மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 50 நாட்களுக்கு மேல் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரபாபு நாயுடு, தனக்கு பார்வை கோளாறு மற்றும் உடல்நிலை சரியில்லாததால், மருத்துவ சிகிச்சை பெற ஜாமீன் வழங்கக் கோரி ஆந்திரா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு,சந்திரபாபு நாயுடுவிற்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!