Skip to content
Home » பெங்களூருல 24, டில்லியில 38…… சபாஷ் சரியான போட்டின்னு சொல்ல முடியல

பெங்களூருல 24, டில்லியில 38…… சபாஷ் சரியான போட்டின்னு சொல்ல முடியல

2024 மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அவா்கள் இன்று  பெங்களூருவில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் காங்கிரஸ், திமுக,  கம்யூ, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 24 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

அதே நேரத்தில் போட்டிக்கு எதையாவது செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பாஜக. இதனால் பாஜக தலைமையில் எதிர்க்கட்சிகளும் டில்லியில் இன்று மாலை 4 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்துகிறது.   பாஜக தலைவர்  நட்டா கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜகவின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்யும் பணிகளை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, தாமாக, பாமக, புதிய தமிழகம் உள்பட மேலும் சில கட்சிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அனைவரும் டில்லி சென்றுள்ளனர். இருப்பினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதுபோல ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி போன்றவர்களுக்கு அழைப்பு இல்லை.அதுபோல  ஒடிசா முதல்வர் பிஜூ பட்நாயக்கை எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை.

சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி,  புதுவை என்ஆர் காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா, பாரதிய சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தியின் இரு பிரிவுகள், ராஷ்டிரிய லோக் சமதா, நிஷாத், அப்னா தளம், ஜேஜேபி, சுகல்தேவ் உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தலைமையில் 38 கட்சிகள் இருந்தாலும், அதிமுக, பாமக தவிர மற்ற கட்சிகள் லட்டர்பேடு கட்சிகளாகத்தான் இருக்கின்றன.  ஆனாலும்  தேர்தல் களத்தில் எண்ணிக்கையை காட்டவேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக இந்த 38 கட்சிகளையும் அழைத்து உள்ளது.  இவர்கள் ஓட்டு வங்கிகளை கணக்கிட்டாலும் காங்கிரஸ் கூட்டணியை விட மிக பலவீனமாகஇருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நட்சத்திர அந்தஸ்து உள்ள தலைவர்கள் யாரும் பாஜக பக்கம் இல்லை என்பதால்  மகாராஷ்டிராவில் எப்படியும் சரத் பவாரை தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளை பலவீனப்படுத்த அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி என பல துறைகளை ஏவி விட்டும் வருகிறது.  என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!