தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பேச்சிமுத்து என்பவர் மதுவாங்கி அருந்தியுள்ளார். அதன் பிறகு அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தான் குடித்த மதுபாட்டிலில் இறந்த நிலையில் வண்டுகள் இருந்ததை பேச்சிமுத்து கண்டறிந்தார். இதை குடித்ததால் தனக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக அவர் கூறினார். சக நண்பர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து டாஸ்மாக்கில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுபாட்டிலில் வண்டுகள்- குடித்தவருக்கு வாந்தி, மயக்கம்
