Skip to content
Home » இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வசிப்பவர் ரங்கநாதன் (80). இவர் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா(78) இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகள்கள் இருவரையும், திருமணம் செய்து கொடுத்து விட்டனர். இந்நிலையில் ரங்கநாதனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அதேபோன்று அவரது மனைவி சகுந்தலாவிற்கும் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென உடல் நலக்குறைவு

ஏற்பட்டு இறந்து விட்டார். மனைவி இறந்த தகவலை கோயம்புத்தூரில் இருந்த ரங்கநாதனுக்கு சொல்லாமல் அவரை காரில் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

அப்போது அவருக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக வீட்டிற்கு அழைத்து செல்கிறீர்கள் என்று உறவினரிடம் ரங்கநாதன் கேட்டுள்ளார். மனைவி சகுந்தலாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதற்காகத்தான் உங்களை அழைத்து செல்கிறோம் என கூறியுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்தவுடன் தனது மனைவி இறந்த செய்தியை கேட்ட ரங்கநாதன் அங்கேயே மயங்கி விழுந்து இறந்து விட்டார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்று கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் இருவரின் உடல்களையும், ஒரே ஊர்வலத்தில் வைத்து அவர்களின் சொந்த ஊரில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இல்லற வாழ்வில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வயதான தம்பதியர்கள் சாவிலும் இணைபிரியாமல் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!