நாடு முழுவதும் ஃபிட் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் உடல்நலத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி அலுவலக வளாகத்தில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இதில் சுங்கத்துறை அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு, உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மிதிவண்டியில் பேரணியாக சென்றனர்.
