Skip to content
Home » பட்டாசு கொளுத்தி…..திருச்சியில் பைக்கில் வீலிங்…9 பேர் கைது…..லைசென்ஸ் ரத்து?

பட்டாசு கொளுத்தி…..திருச்சியில் பைக்கில் வீலிங்…9 பேர் கைது…..லைசென்ஸ் ரத்து?

  • by Senthil

பைக்கில் வீலிங் சாகசம் செய்த டிடிஎப் வாசனின்  டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ள  நிலையில் அவரது சாகசங்கள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன. ஆனால் அவரை பின்பற்றி, அவரது ரசிகர்கள் என்ற பெயரில் சில இளைஞர்கள் வாசன் போலவே சாலைகளில்  போக்குவரத்துக்கு இடையூறாகவும், மற்ற பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும்  இரு சக்கர வாகனங்களை ஓட்டி அதனை சமூக வலைதளங்களில் பதவிட்டு வருகிறார்கள்.

தீபாவளி தினத்தில்  திருச்சி  பைபாஸ் சாலைகளில் பைக்கில் வீலிங் செய்தவாறு  பட்டாசுகளை கொளுத்தி  வாணவேடிக்கைகளயைும் நிகழ்த்தினர். திடீரென  சாலைகளில்  தீப்பிழம்பு ஏற்படுவதை பார்த்த  மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இது குறித்து  திருச்சி எஸ்.பிக்கு பலர் புகார் செய்தனர்.

எஸ்.பி.  வீ. வருண்குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பைக்கில் வீலிங் செய்த நபர்கள் யார் என துப்புதுலக்கினர்.  இந்த செயலில் ஈடுபட்டதாக திருச்சி மாவட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.  இது தொடர்பாக 4 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைதான 9 பேர்களிடத்திலும் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 9 பேரின் லைசென்ஸ்களையும் ரத்து செய்ய  போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைதானவர்கள் விவரம் வருமாறு:

திருச்சி மாவட்ட புறவழிச்சாலைகளில் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சாகசம் செய்வதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்,

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இகாப, அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 4 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1. ஜீயபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே இரு சக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட பர்ஷத் அலி வயது 21, த.பெ. உஸ்மான் அலி, எலமனூர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, மேற்படி நபரை கைது செய்தும், அவரது இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

2. காணக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தச்சங்குறிச்சி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த

1) அஜித்குமார்(21) ,. த.பெ.முருகேசன், ஊட்டத்தூர் ,  2) அஜய்( 20), த.பெ. புஷ்பநாதன், இந்திரா காலனி, சிறுகனூர் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மேற்படி நபர்களை கைது செய்தும், இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர். சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சிறுமருதூர் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த 3) அஜய் (24), த.பெ. சீனிவாசன், கல்லாக்காடு, புத்தூர், திருச்சி.

4) மணிகண்டன், த.பெ. பழனிச்சாமி. சீனிவாசபுரம். தஞ்சாவூர். 5) சக்திவேல் (20), த.பெ. முத்துசெல்வம், கணபதி நகர். சிறுகனூர் மற்றும் 6) விஜய் (18) த.பெ. அண்ணாதுரை. தச்சங்குறிச்சி, லால்குடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி 1-ம் எதிரியை திருச்சி மாநகர அரசு மருத்துவனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தும், 3 மற்றும் 4 ம் எதிரியை சமயபுரம் காவல் நிலையத்தில் கைது செய்தும். மேற்படி எதிரிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர். லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்த 1) அருள்முருகன் (24). த.பெ. சௌந்தரராசன், குடித்தெரு, பனமங்லம், லால்குடி. 2) கிரீத்திஸ் 20. , த.பெ. பாலகிருஷ்ணன், கம்பரசம்பேட்டை, ஸ்ரீரங்கம்,

3) வசந்தகுமார் (20), த.பெ. தேவேந்திரன், கீழசிந்தாமணி. திருச்சி

4) பெருமாள் என்ற தேசிங்க பெருமாள் (18). த.பெ. பன்னீர்செல்வம். எசனை கோரை, லால்குடி ஆகியோர்கள் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்தும், அவர்கள் பயன்படுத்திய மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை வீடியோவாக Instagram, x (Twitter), Facebook & Youtube போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை  சமூக வலைத்தள கண்காணிப்பு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ததை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களை பகிர்பவர்களை சைபர் கிரைம் போலீஸார் மூலம் கண்காணித்து, அதன் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்டவாறு, இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு. சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்ப்பட்டுள்ளனர். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வருண்குமாரின் உதவி எண் 9487464551 என்ற எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!