அரசியல் செய்யவே தமிழை திமுக பயன்படுத்துகிறது.. பாஜ கிண்டல்

54
Spread the love

திருச்சியில் இன்று பாஜக மாநில செய்தி தொடர்பாளா் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது.. கனிமொழிக்கு இந்தி தொியாது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. துணை ஜனாதிபதியின் இந்தி பேச்சை மொழி பெயர்த்தவர் கனிமொழி. அரசியலுக்கு தமிழ், தொழிலுக்கு இந்தி என்ற ஸ்டாலின் குடும்பத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது. எனவே கனிமொழி தானாக முன்வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை ஆதரித்து ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை பாஜக நடத்த உள்ளது. முதற்கட்டமாக திருச்சியில் இன்று ஆரம்பித்து உள்ளது என்று அவர் கூறினாா்.  மாவட்ட தலைவர் ராஜேஷ், மாநில செயலாளா் பார்வதி நடராஜன், ஒபிசி அணி மாநில பொது செயலாளா் எஸ்பி சரவணன், மாநில மகளிர் அணி செயலாளா் லீலா சிவக்குமார், சிறுபான்மை அணி மாநில துணை தலைவர் சார்லஸ், எஸ்சி அணி மாநில பொது செயலாளா் பாண்டியன், மாவட்ட பொது செயலாளா் காளீஸ்வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY