Skip to content
Home » திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜ கூட்டணி.. மேகலாயாவில் தொங்கு சட்டசபை…

திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜ கூட்டணி.. மேகலாயாவில் தொங்கு சட்டசபை…

திரிபுராவில் கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்றது. 3 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம்….

திரிபுரா: இந்தியா டுடே – மை ஆக்ஸிஸ் இந்தியா நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக கூட்டணி 36 தொகுதிகள் முதல் 45 தொகுதிகள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சிபிஎம் – காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 11 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜன் கி பாத் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 29 – 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி 9 – 16 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் – இடிஜி கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 21-27 தொகுதிகளிலும், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி 18 – 24 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ்-மேட்ரிஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 29 – 36 தொகுதிகளிலும், காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி 13-21 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து: இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் NDPP – பாஜக கூட்டணி 38 முதல் 48 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று இந்தியா டுடே – மை ஆக்ஸிஸ் இந்தியா நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு NPF கட்சி 3 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும், காங்கிரஸ் அதிகபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜன் கி பாத் கருத்துக் கணிப்பில் NDPP – பாஜக கூட்டணி 35-45 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், NPF 6 – 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் – இடிஜி கருத்துக் கணிப்பில் NDPP-பாஜக கூட்டணி 39 – 49 தொகுதிகளிலும், NPF 4 – 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ் – மேட்ரிஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் NDPP – பாஜக கூட்டணி 35-43 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், NPF 2 – 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா: 60 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் NPP கட்சி 18 – 24 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே – மை ஆக்ஸிஸ் இந்தியா நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக 4 – 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6-12 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே – மை ஆக்ஸிஸ் இந்தியா கணித்துள்ளது.

ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பில் NPP 11 – 16 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பாஜக 3 – 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 – 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் – இடிஜி கருத்துக்கணிப்பில் NPP 18 – 26 தொகுதிகளிலும், பாஜக 3 – 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 – 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ் – மேட்ரிஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் NPP 21 – 26 தொகுதிகளிலும், பாஜக 6 – 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 – 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மேகாலயாவை பொறுத்தவரை தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டு, சென்ற முறை போலவே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமையலாம் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!