Skip to content
Home » அதிமுகவுக்கு ஆதரவு பெருகுதாம்…. சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்…

அதிமுகவுக்கு ஆதரவு பெருகுதாம்…. சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்…

  • by Senthil

பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மனதார அதிமுகவை ஆதரிக்கின்றனர் – திருச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் – ன் 107 வது பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சி, உறையூர், குறத்தெருவில் அதிமுக பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் பூபதி ஏற்பாட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா, பகுதி கழகச் செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, அன்பழகன், முஸ்தபா ,  திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் முத்துமாரி, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணை தலைவர் சேது மாதவன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன்… நிரந்தர பொதுச்செயலாளர் EPS தான் என பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஓபிஎஸ் பொதுக்குழுவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்ட பின்னர்
அவர் எந்த அடிப்படையில் உரிமை மீட்பு போராட்டம் என தனது சகாக்கள் 4 பேருடன் ஊர் ஊராக செல்கிறார்?
அவருக்கு அதிமுகவில் என்ன உரிமை இருக்கிறது? நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க கூட்டணி சேர்கிறோம் என ஓபிஎஸ் சொல்கிறார். அவரின் கருத்தை டிடிவி தினகரனும் வழிமொழிகிறார்.
அதிமுகவும் மோடி தான் மீண்டும் பிரதமர் என கூறி வந்தோம்.

ஆனால் பாஜக தொண்டர்களோ அடுத்த முதல்வர் அண்ணாமலை தான் என முழக்கமிடுகின்றனர். அதிமுக, அதிமுகவினர் என்ன இளிச்சவாயர்களா? மோடியை மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர வைக்கவா அதிமுக பாடுபடும்.  ஆனால் தமிழக முதல்வர் அண்ணாமலை என நீங்கள் முன்னிறுத்துவதா? என கேள்வி எழுப்பினார். எடப்பாடியார் ஆண்மையோடு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மனதார அதிமுகவை ஆதரிப்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!