Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கோர்ட்டில் இன்று சவுக்கு சங்கர் ஆஜர்

பெண் போலீசாரைப்பற்றி அவதூறான  கருத்துக்களை வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  சவுக்கை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்துள்ளனர்.

திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜர் படுத்த நேற்று சவுக்கு சங்கரை பெண் போலீசார் அழைத்து வந்து  திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.  அப்போது திருச்சி போலீசார்  சவுக்கிடம் விசாரணை நடத்த அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுக்க  மனு தாக்கல் செய்தனர்.  பின்னர் நேற்று இரவு சவுக்கு சங்கரை லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். இன்று காலை லால்குடி சிறையில் இருந்து  போலீசார் சவுக்கை அழைத்து வந்து திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!