Skip to content
Home » பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்…. வாக்களித்த பின் எடியூரப்பா பேட்டி

பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்…. வாக்களித்த பின் எடியூரப்பா பேட்டி

வரிசையில் நின்று வாக்களித்தார் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை..!கர்நாடக சட்டப்பேரவை  தேர்தலில்  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். பெங்களூரு, ஜெயநகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார். பெங்களூருவில் வாக்களித்த பிறகு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, பணவீக்கம் குறித்து, பொதுமக்கள் மீது சுமை இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் பொதுமக்களுடன் இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு (அதைப் பற்றி பேச) உரிமை இல்லை என்றார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஷிஜாரிபுராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா வாக்களித்த பின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- “எல்லா மக்களையும் கூடிய விரைவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நான் 100% உறுதியாக நம்புகிறேன். 75-80% க்கும் அதிகமானோர் பாஜகவை ஆதரிப்பார்கள். நாங்கள் 130-135 இடங்களை வெல்வோம்” என்றார்.

கர்நாடகா முதல்-மந்திரியும் ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான பசவராஜ் பொம்மை சிக்காவியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு  வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.வாக்களிக்கப்பதற்கு முன் காவேரியில் உள்ள காயத்ரி கோவிலில் பசவராஜ் பொம்மை வழிபாடு செய்தார்.

இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியும் இன்று காலை வரிசையில் இன்று வாக்களித்தார்.

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த எடியூரப்பா...!

ஜனநாயக கடமையை ஆற்றிய இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!