Skip to content
Home » பாஜகவை தூக்கி எறிய வேண்டும்….. திருமா., பிரசாரம்…

பாஜகவை தூக்கி எறிய வேண்டும்….. திருமா., பிரசாரம்…

அரியலூர் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் தொல். திருமாவளவன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரருடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அரியலூர் அண்ணா சிலை அருகே பிரச்சாரத்தைதொடங்கியபோது கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய தொல்.திருமாவளவன், தேசிய அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளார். அந்த தேர்தல் வியூகம் வெற்றி பெற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்‌.தளபதி ஸ்டாலின் தனது தேர்தல் களத்தை தமிழகத்துடன் சுருக்கி கொள்ளாமல், தேசிய அளவில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து இந்திய கூட்டணி என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார். இது மிகவும்

முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய அரசியல் வரலாற்றில் பேசப்படும் ஒன்றாக அமைய உள்ளது.
திமுக நினைத்திருந்தால் அதிமுகவை எதிர்த்து, எடப்பாடி விமர்சித்து இந்த தேர்தலை இலகுவாக சந்தித்து வெற்றி பெற முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தேசத்தை மீட்க வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும்.
இந்திய ஜனநாயகத்தை குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் தான் ராகுல் காந்தி உடன் கைகோர்த்து இந்த களத்தை விரிவுபடுத்தி உள்ளார். இந்த தேர்தல் இந்திய மக்களுக்கும், சங்பரிவார் கும்பலுக்கும் நடக்கும் தர்மயுத்தம். கருத்தியல் போர். இதில் மக்கள் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு இந்திய கூட்டணி துணை நிற்கும்.

நமது முதல்வர் எடுத்துள்ள இந்த தேர்தல் வியூகம், மோடி, அமித்ஷாவை நடுங்க வைத்துள்ளது. அதனால் தான்‌ அகில இந்திய‌கட்சியான காங்கிரஸ் கட்சியை‌ விட, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட, திமுகாவை எதிர்க்கின்றார். குடும்ப கட்சி என்கின்றனர், குடும்ப ஆட்சி‌ என்கின்றனர் ,
தமிழ் பிடிக்கும் என்கின்றார், இட்லி பிடிக்கும் என்கின்றார். இந்த நாடகம் எல்லாம் எதற்க்காக என்றால், திமுகவிற்க்கு வைக்கும் செக். ஸ்டாலினுக்கு வைக்கும் செக் என்பதுதான் உண்மை.
இது திமுக தலைவருக்கும், திமுக விற்கும் வைக்கும் செக். திமுக தலைவரை அச்சுறுத்த நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்.

திமுக தேர்தல் கட்சி அல்ல. தமிழனத்தின் காப்பாளர் இந்திய தேசத்தை காப்பாற்றுபவர். எனவே எனக்கு வாக்களியுங்கள், என்னை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்பதைவிட திமுக தலைவர் வகுத்துள்ள வியூகத்தினை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்கிறேன்.
அவரின் இலக்கு நிறைவேற வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பாஜகவை தூக்கி எறிய வேண்டும். எனவே நாம் ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும் என பேசினார்.
மேலும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை வேட்பாளரின் பெயர் திருமாவளவன் என்கிற முத்துவேல் கருணாநிதி தான், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் என்கிற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் சின்னத்தைப் பொருத்தவரை உதயசூரியனுக்கு பதிலாக பானை சின்னத்தில் வாக்களித்து ஸ்டாலினை வெற்றி பெற செய்ய வேண்டும் என தொல். திருமாவளவன் கூறினார்.
கூட்டத்தில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உள்ளிட்ட கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!